என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தவறான சிகிச்சை"
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் குலமாணிக்கத்தை சேர்ந்தவர் கமலா (வயது 65).
இவருக்கு இடுப்பு பகுதியில் சிறிய கட்டி இருந்ததால் கடந்த 13-ந் தேதி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் சேனாதிபதி, அந்த கட்டியை அகற்றுவதாக கூறி அந்த இடத்தில் 2 செ.மீட்டர் ஆழத்துக்கு காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் வலியில் துடித்த கமலாவிடம், இந்த கட்டிக்கு இப்படி தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இடுப்பு பகுதியில் தொடர்ந்து வலி இருந்து வந்ததால் மீண்டும் நேற்று மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தனது மகள் சித்ராவுடன் வந்த கமலா, இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பரிமளாவிடம் முறையிட்டார்.
இதையடுத்து அவர் உடனடியாக கமலாவை உள்நோயாளியாக அனுமதித்து தனது நேரடி கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறார்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பரிமளா கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட கமலாவுக்கு மருத்துவ உதவியாளர் சேனாதிபதி சிகிச்சை அளித்தது தொடர்ந்து அவரை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து மருத்துவத்துறை இணை இயக்குனர் உமா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி யாஸ்மின். இவர் கருவுற்றிருப்பதாக கூறி 8 மாதங்களாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன்பின்னர் குழந்தை இல்லை என்று கூறியதாகவும் அவரது கணவர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இணை இயக்குனர்கள் பதில் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
புதுக்கோட்டை குப்பையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் திவ்யபாரதி (வயது 17), பிளஸ்-2 முடித்துள்ளார்.
இந்தநிலையில் திவ்யபாரதிக்கு நெஞ்சில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் திவ்ய பாரதியின் நெஞ்சில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யபாரதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு வலி குணமாகவில்லை. இதையடுத்து திவ்யபாரதியை அவரது பெற்றோர் மீண்டும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கட்டி இருக்கும் நெஞ்சு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாமல் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தது பரிசோதனையில் தெரியவந்தது.
எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திவ்யபாரதியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்